ஆட்டம், பாட்டம் ஜாலி என இதுவரை வந்து போன பிரபுதேவாவை முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக்கி இருக்கும் படம். காக்கி சட்டை அவருக்கு விறைப்பாக இருந்ததா…
முன்ளாள் நீதிபதி ஒருவர் கொடூரமாக கொல்லப்படுகிறார். துப்பு துலக்க திணறும் போலீஸ், ஒரு கட்டத்தில் தங்கள் துறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தற்போது விவசாயம் பார்த்து வரும் பிரபுதேவாவை தேடி ஒடுகிறது.
அவர் உடனே அந்த பொறுப்பை ஏற்பாரா…மறுக்கிறார். தொடர்ந்து கட்டாயப் படுத்தும் காவல்துறைக்காக மறுபடி காக்கி சட்டை அணிகிறார். நிதானமாக துப்பறிதலை தொடர்கிறார்.
இதற்குள் இன்னொரு முக்கிய பிரமுகர் கொலை. பரபரப்பாகிறது நகரம். என்ன நடக்கிறது நகரில்? கேட்கிறது மேல் மட்டம். தவிக்கிறது காவல்துறை. தவிப்பை மேலும் நீடிக்க விடாமல் கொலையாளியை பிரபுதேவா கண்டறிந்தாரா என்பது சின்னச் சின்ன டுவிஸ்ட்டுகளுடன் கூடிய கிளைமாக்ஸ்.

பிரபுதேவா கதையை கேட்டவுடனே ஒப்புக் கொண்ட படம் என்பது காக்கிச்சட்டைக்குள்ளான அவரது முறைப்பிலும் விறைப்பிலும் தெரிகிறது. மிடுக்கான தோற்றத்தில் வரும் பிரபு தேவா எந்த ஒரு காட்சிக்கும் அதிகமான மெனக்கெடல் இல்லாமல் அந்த கேரக்டருக்குள் தன்னை இணைத்துக் கொண்ட விதம் அத்தனை இயல்பு. அழகான மனைவி நிவேதா பெத்துராஜூடனான அன்யோன்யத்தில் காதல் பொங்கி வழிகிறது.
நாயகியாக வரும் நிவேதா பெத்துராஜ் நடிப்பும் வசீகரமும் இணைந்த நடிகை என்பதை இந்த படத்திலும் நிரூபிக்கிறார்.
கார்பரேட் வில்லன்களாக வரும் சுதன்சு பாண்டே மற்றும் சுரேஷ் மேனன் வழக்கமான வில்லத்தனம் காட்டி ரசிகனை பயமுறுத்தும் வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள்.
போலீசாக வரும் பாகுபலி பிரபாகர் நிறைவான நடிப்பில் நெஞ்சம் நிறைகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் இயக்குனர் மகேந்திரன் நிறைவு.

இமான் இசையில் ‘உதிரா’ பாடல் ரொம்ப நாளைக்கு நெஞ்சை விட்டு உதிராது. ஆக்ஷன் காட்சிகளில் அனல் தெறிக்க வைக்கிறது, கே.ஜி வெங்கடேஷின் கேமரா. நடனம், காதல் என்று இதுவரை நடித்து வந்த பிரபுதேவாவை ஆக்ஷன் பக்கம் திருப்பியதற்காகவே பாராட்டலாம், இயக்குனர் முகில் செல்லப்பனை.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/main.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/11/main-150x150.jpgrcinemaசினி நிகழ்வுகள்ஆட்டம், பாட்டம் ஜாலி என இதுவரை வந்து போன பிரபுதேவாவை முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக்கி இருக்கும் படம். காக்கி சட்டை அவருக்கு விறைப்பாக இருந்ததா... முன்ளாள் நீதிபதி ஒருவர் கொடூரமாக கொல்லப்படுகிறார். துப்பு துலக்க திணறும் போலீஸ், ஒரு கட்டத்தில் தங்கள் துறையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தற்போது விவசாயம் பார்த்து வரும் பிரபுதேவாவை தேடி ஒடுகிறது. அவர் உடனே அந்த பொறுப்பை ஏற்பாரா...மறுக்கிறார். தொடர்ந்து கட்டாயப் படுத்தும் காவல்துறைக்காக...