தயாரிப்பு நிறுவனம் : Asian Media
தயாரிப்பாளர் : மதியழகன் முனியாண்டி
இயக்குனர் : கே வீரக்குமார்
வசனம் : பொன் பார்த்திபன்
ஒளிப்பதிவு : கிருஷ்ணசாமி
இசை : தஷி
நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், சூப்பர் சுப்பராயன், பால சரவணன், இமான் அண்ணாச்சி, சோனா, யமுனா மற்றும் பலர்.

கதை: வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதை.

‘மக்கள் செல்வி ‘என்ற பட்ட பெயருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் சீருடை அணிந்து நடித்திருக்கும் திரைப்படம் இது. போலீஸ் கதை என்பதால் அதிலும் ஹீரோயின் போலீஸ் அதிகாரி என்பதால், வில்லன்கள் கண்டிப்பாக பாலியல் பலாத்காரம், போதை மருந்து கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் கட்டாயமாக ஈடுபட்டிருக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் இதிலும் மூன்று வில்லன்கள் இருக்கிறார்கள். இவர்களை தேடி கண்டுபிடித்து சட்ட விரோதமாகவே அழிக்கவேண்டிய பணி கதாநாயகிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் வழக்கம்போல் இடம்பெறுகிறது.

திரைக்கதையில் எந்த ஒரு அதிரடியான திருப்பமோ… புத்திசாலித்தனமான காட்சி அமைப்போ இல்லை. பலவீனமாக எழுதப்பட்ட திரைக்கதையை மொத்தமாக கதையின் நாயகியான நடிகை வரலட்சுமி தாங்குவதால் என்னவோ..படக்குழுவினர் அவருக்கு டைட்டிலில் ‘மக்கள் செல்வி’ என்ற பட்டப் பெயரை கொடுத்திருக்கிறார்களோ..! என எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும் நடிகை வரலட்சுமி ஆக்ஷன் காட்சிகளில் தன்னால் முடிந்த அளவுக்கு எதிரிகளை பறந்து பறந்து பந்தாடி கால்களால் எட்டி எட்டி உதைக்கிறார். முன் வரிசையில் இருக்கும் சில தீவிர ரசிகர்கள்,’ ஐ… பொம்பள விஜயகாந்த்’ என்று இவரை பாராட்டுவதையும் கேட்கலாம்.

நாயகி வரலட்சுமி சரத்குமார் ஐபிஎஸ் முடித்துவிட்டு பயிற்சிக்காக தமிழகத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார். அப்போது அப்பகுதியில் பூ விற்கும் ஒரு சாதாரண விளிம்பு நிலை பெண்ணுடன் அறிமுகமாகி, நட்பாகி, உடன் பிறவாத உறவாகிறார். அந்த உடன்பிறவாத தங்கையை சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து புதைத்து விடுகிறார்கள். தன்னுடைய காவல் துறை அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்க போராடுகிறார். ஆனால் இந்த சமூகத்தில் பணக்காரர்களுக்கும், அரசியல் அதிகாரம் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பிய நீதி கிடைக்கும் என்றும், சட்டப்படியான நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்பதையும் அனுபவத்தில் உணர்கிறார். அதன் பிறகு தன்னுடைய உடன் பிறவாத தங்கைக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராகப் புறப்பட்டு, அதற்கு காரணமான மூன்று வில்லன்களை தமிழகத்திலிருந்து மலேசியா வரை சென்று பழி தீர்த்துவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி பணியைத் தொடர்கிறார்.

இயக்குனர் படத்திற்கு ‘சேசிங்’ என்று பெயர் வைத்ததால் டைட்டிலில் தொடங்கிய கார் சேசிங் கிளைமாக்ஸ் வரை நீள்கிறது. பாடல்கள், இசை, பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆறுதலை தருகிறது.

சேசிங் – அழுத்தமான திரைக்கதை மிஸ்ஸிங்

சேசிங் – ரசிகர்களுக்கு வீஸிங்.

சேசிங் – ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் ஃப்ரீஸிங்

சேசிங் – ஈஸி கெஸ்ஸிங்.

https://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/7dd28cfc-7686-4d3a-9cd4-9b38211b755b-1024x682.jpghttps://chennairoyalcinema.com/wp-content/uploads/2021/04/7dd28cfc-7686-4d3a-9cd4-9b38211b755b-150x150.jpgrcinemaசினிமா செய்திகள்திரை விமர்சனம்தயாரிப்பு நிறுவனம் : Asian Media தயாரிப்பாளர் : மதியழகன் முனியாண்டி இயக்குனர் : கே வீரக்குமார் வசனம் : பொன் பார்த்திபன் ஒளிப்பதிவு : கிருஷ்ணசாமி இசை : தஷி நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், சூப்பர் சுப்பராயன், பால சரவணன், இமான் அண்ணாச்சி, சோனா, யமுனா மற்றும் பலர். கதை: வழக்கமான பழிக்கு பழிவாங்கும் கதை. 'மக்கள் செல்வி 'என்ற பட்ட பெயருடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் சீருடை அணிந்து நடித்திருக்கும் திரைப்படம் இது....